Wednesday, November 11, 2020

முதலாம் அத்தியாயம்: நூலின் தோற்றம், உலகத்தின் உருவாக்கம், புத்தகத்தின் உள்ளடக்கங்களின் சுருக்கம்

==========================ரிஷிகளின் வினா==========================

मनुमेकाग्रमासीनमभिगम्य महर्षयः ।

प्रतिपूज्य यथान्यायमिदं वचनमब्रुवन् ॥ १ ॥

மஹரிஷிகள், (மனதை) ஒருமுக படுத்தி அமர்ந்திருந்த (ஸ்வாயம்புவ) மனுவை அணுகி, அவரை நியாயப்படி பூஜித்து, இந்த வார்த்தைகளை கூறினர் || 1 ||


भगवन् सर्ववर्णानां यथावदनुपूर्वशः ।

अन्तरप्रभवानां च धर्मान्नो वक्तुमर्हसि ॥ २ ॥

பகவானே! அனைத்து வர்ணங்களின் மற்றும் கலப்பு வர்ணங்களின் தர்மங்களை சரியாகவும், முறையாகவும் எங்களுக்கு சொல்லிட வேண்டும். || 2 ||


त्वमेको ह्यस्य सर्वस्य विधानस्य स्वयम्भुवः ।

अचिन्त्यस्याप्रमेयस्य कार्यतत्त्वार्थवित् प्रभो ॥ ३ ॥

“பிரபுவே, தாம் மட்டுமே சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட, ஒப்பற்ற சுயம்புவின் விதிகள் அனைத்தையும், காரியங்களின் தத்துவங்களையும் அறிந்தவர்.” || 3 ||

==========================மனுவின் பதில்==========================

स तैः पृष्टस्तथा सम्यगमितोजा महात्मभिः ।

प्रत्युवाचार्च्य तान् सर्वान् महर्षींश्रूयतामिति ॥ ४ ॥

இவ்வாறு மகாத்மாக்களால் அவ்விதம் வினவப்பட்ட அளவிடமுடியா நன் வீரியம் கொண்ட (ஸ்வயம்புவ மனு), அந்த அனைத்து மகரிஷிகளையும் மரியாதை செய்து மறுமொழியாய், ‘செவிமெடும்என்றார். || 4 ||

       ====================அண்டத்தின் உருவாக்கம்====================

आसीदिदं तमोभूतमप्रज्ञातमलक्षणम् ।

अप्रतर्क्यमविज्ञेयं प्रसुप्तमिव सर्वतः ॥ ५ ॥

இது (அதாவது அண்டம்) இவ்வாறு இருளில், உணர்வற்றதாய், லட்சணமற்றதாய், பகுத்தறிவால் அடைய முடியாததாய், தெரியாததாய், ஆழ்ந்த நித்திரையில் இருந்ததைப்போன்று அனைத்துவகையிலுமிருந்தது. || 5 ||

ततः स्वयम्भूर्भगवानव्यक्तो व्यञ्जयन्निदम् ।

महाभूतादि वृत्तोजाः प्रादुरासीत् तमोनुदः ॥ ६ ॥

பிறகு, புலன்களுக்கு அகப்படாத, சுயம்புவான பகவான், பயனுள்ள ஆற்றல் கொண்ட அவர், மகத்தான (பஞ்ச) பூதங்களுக்கு ஆதியான அவர், (தன்னை) வெளிப்படுத்தி இருளை சிதறடித்தார். || 6 ||


योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ ७ ॥

உள்ளிருக்கும் இந்திரியத்தால் (மட்டுமே) பற்றிடக்கூடியவர், சூட்சுமமானவர், புலன்களுக்கு அகப்படாதவர், நிரந்தரர், அனைத்து உயிரினங்களையும் உள்ளடக்கியவர், சிந்தனைக்கு அப்பாற்பட்டவர் எவரோ அவர் தன் சுயமான (விருப்பத்தால்) ஒளிர்ந்தார். || 7 ||


       ====================திரவத்தின் உற்பத்தி====================

सोऽभिध्याय शरीरात् स्वात् सिसृक्षुर्विविधाः प्रजाः ।

अप एव ससर्जादौ तासु वीर्यमवासृजत् ॥ ८ ॥

அவர் தனது சரீரத்திலிருந்து விதவிதமான பிரஜைகளை சிருஷ்டிக்க விருப்பம் கொண்டு, முதலில் சிந்தையின் மூலம் நீரை உண்டாக்கி, தனது வீர்யத்தை (அதனுள்) வைத்தார். || 8 ||


       ====================பிரம்மாவின் தோற்றம்====================

तदण्डमभवद्धैमं सहस्रांशुसमप्रभम् ।

तस्मिञ्जज्ञे स्वयं ब्रह्मा सर्वलोकपितामहः ॥ ९ ॥

அது பொன்னிற முட்டையாகி, ஆயிரம் அம்ஷுவிற்கு (அதாவது சூரியனுக்கு) சமமாய் ஒளிர்ந்தது. அதில் (அதாவது அந்த முட்டிலிருந்து) அவரே அனைத்துலக பிதாமகரான பிரம்மாவாய் முளைத்தார். || 9 ||


       ====================நாராயணன் எனும் நாமம்====================

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।

ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥

“(அந்த) நீரானது நரா என்று அழைக்கப்படுகிறது, (ஏனெனில் அந்த) நீர் உண்மையில் நரனிலிருந்து உற்பத்தியானதே. அது அவருடைய முதல் இருப்பிடமாய் (அதாவது அயனமாய்) அமைந்ததால், அவர் நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். || 10 ||


       =======================பிரம்மாவின் இயல்பு=======================

यत् तत् कारणमव्यक्तं नित्यं सदसदात्मकम् ।

तद्विसृष्टः स पुरुषो लोके ब्रह्मैति कीर्त्यते ॥ ११ ॥

புலன்களுக்கு அகப்படாததும், நித்தியமானதும், இருப்பது-இல்லாதது நிறைந்ததுமான அந்த காரணத்திலிருந்து, அந்த புருஷன் சிருஷ்டித்தார், (அவரே) உலகத்தில் பிரம்மா என்று புகழ்பெற்றார். || 11 ||

तस्मिन्नण्डे स भगवानुषित्वा परिवत्सरम् ।

स्वयमेवात्मनो ध्यानात् तदण्डमकरोद् द्विधा ॥ १२ ॥

அந்த முட்டையில் அந்த பகவான் ஓர் முழு ஆண்டு (இது பிரம்மாவின் ஓர் ஆண்டு அளவினைக் குறிக்கும், அதாவது 31,104,000 கோடி மானுட ஆண்டுகள்) வசித்திருந்து, சுயமாய் தமது தியானத்தால் அந்த முட்டையை இரண்டாய் பிளந்தார் || 12 ||


       =========தேவலோகம் மற்றும் பூலோகத்தை நிர்மாணித்தல்=========

ताभ्यां स शकलाभ्यां च दिवं भूमिं च निर्ममे ।

मध्ये व्योम दिशश्चाष्टावपां स्थानं च शाश्वतम् ॥ १३ ॥

அவ்விரண்டு அந்த துண்டுகளிலிருந்து தேவ(லோகத்தையும்), பூமியையும் நிர்மித்தார். மத்தியில், விண்வெளியையும், எட்டு திசைகளையும், நிரந்தரமான நீருக்கான ஸ்தானம் (இவற்றையும் உருவாக்கினார்) || 13 ||


       ==============மஹத் முதலான உலகங்களை படைப்பது==============
  

उद्बबर्हात्मनश्चैव मनः सदसदात्मकम् ।

मनसश्चाप्यहङ्कारमभिमन्तारमीश्वरम् ॥ १४ ॥

தம்மிடமிருந்து அவர் மனம், மெய், பொய் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தார். (மேலும்,) மனதிலிருந்து சுய உணர்வின் செயல்பாடுகளைக்கொண்ட ஈச்வரனான அஹங்காரம் (அதனைப் உற்பத்தி செய்தார்) || 14 ||

महान्तमेव चात्मानं सर्वाणि त्रिगुणानि च ।

विषयाणां ग्रहीतॄणि शनैः पञ्चैन्द्रियाणि च ॥ १५ ॥

அந்த மகத்தானவர், மேலும் ஆத்மாவானவர், முக்குணங்கள் அனைத்தையும் (அதாவது ஸத்வ குணம், ரஜோ குணம்தமோ குணம்), படிப்படியாக விஷயங்களை உள்வாங்கி உணரும் ஐந்து இந்திரியங்களை (உருவாக்கினார்) || 15 ||

तेषां त्व् अवयवान् सूक्ष्मान् षण्णाम् अप्यमित-ओजसाम् |

संनिवेश्य-अत्ममात्रासु सर्वभूतानि निर्ममे || १६ ||

அவர் அளவற்ற ஆற்றல் பொருந்திய அந்த ஆறு சூட்சுமமான அவயவயங்களை, தனது கூறுகளுடன் இணைத்து அனைத்து உயிரினங்களையும் நிர்மித்தார் || 16 ||

यन् मूर्त्यवयवाः सूक्ष्मास्तानीमान्याश्रयन्ति षट् ।

तस्माच्छरीरमित्याहुस्तस्य मूर्तिं मनीषिणः ॥ १७ ॥

இந்த ஆறு சூட்சுமங்களும் மூர்த்தியின் அவயவயமான இதில் இணைந்திடுவதால், அறிஞர்கள் அந்த மூர்த்தியை சரீரம் என்றழைக்கின்றனர் || 17 ||

तदाविशन्ति भूतानि महान्ति सह कर्मभिः ।

मनश्चावयवैः सूक्ष्मैः सर्वभूतकृदव्ययम् ॥ १८ ॥

அந்த மகத்தானவைகள், அவற்றின் கர்மங்களுடன், மனமும், அதன் சூட்சும அவயவயங்களுடன், அனைத்து உயிரினங்களை உருவாக்குபவர் மற்றும் அழிவற்றவருள் நுழைகின்றன || 18 ||

तेषामिदं तु सप्तानां पुरुषाणां महौजसाम् ।

सूक्ष्माभ्यो मूर्तिमात्राभ्यः सम्भवत्यव्ययाद् व्ययम् ॥ १९ ॥

மகாசக்தி பொருந்திய ஏழு புருஷர்களின் சூட்சுமமான மூர்த்தி கூறுகளிலிருந்து, அழியாததிலிருந்து அழியும் தன்மை கொண்ட (இவ்வுலகம்) சம்பவிக்கிறது || 19 ||

No comments:

Post a Comment